
ஜி.வி பிரகாஷ் நடிப்பில், சன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படத்தை எம்.ராஜேஷ் இயக்கிவருகிறார். 'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்குப் பிறகு மீண்டும் ஜிவி பிரகாஷ், எம் ராஜேஷ் கூட்டணி அமைத்துள்ளனர். அம்ரிதா ஐயர் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ‘வணக்கம்டா மாப்ள’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)